Re:

என்னடா இது “Re:” அப்படீன்னு மொட்டையா ஒரு தலைப்போட இந்தப் பதிவைப் போட்டிருக்கேன்னு பாக்கறீங்களா?

ஆமாங்க… Microsoft Outlook 2007 ல இப்படி ஒரு Bug இருக்கறத நிறைய கவனிச்சிருப்பீங்களான்னு தெரியல.

 இல்ல…  இப்படி ஒரு Bug எனக்கு மட்டும்தான் வருதான்னு தெரியலீங்க.

 சரி. மேட்டருக்கு வருவோம்.

Weekly Meeting” அப்படீங்கற சப்ஜக்ட் லைனோட நம்ம சகாக்களுக்கு அந்த வார மீட்டிங் பத்தின குறிப்புகளோட ஒரு மெயில் அனுப்புறோம்.  அனுப்பிய 2 நாளைக்குப் பிறகு மீட்டிங் சம்பந்தமா எல்லாருக்கும் ஏதோ ஒரு அப்டேட் குடுக்கணும்னு நெனக்கறீங்க. “Sent Items” ல, இருக்குற அந்த மெயில ஓபன் பன்னி, அதே மெயில்ல, “Reply to All” பட்டன கிளிக் செஞ்சு, மீட்டிங் குறித்த சில மேட்டர்கள சேத்து அனுப்பினா, யாருக்குல்லாம் அந்த “Reply to All” மெயில் போச்சோ, அவங்களுக்கு நாம அனுப்பிய இந்த அப்டேட்டட் மெயிலோட சப்ஜெக்ட் லைன்ல “Re: Weekly Meeting” அப்படீன்னு இருக்கறதுக்கு பதிலா, வெறும் “Re:” ன்னு தாங்க இருக்கும். 

இந்த Bug க்கு யாரு கிட்டயாவது ஒரு சொல்யூஷன் இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்….

நன்றி!!!

செய்திகளுக்கு பதிலளிக்கும்போது, அடையாள உரையுடன் உள்வரிக் கருத்துரைகளைச் சேர்த்தல்

மின்னஞ்சல் செய்திகளுக்குப் பதிலளிக்கும்போது, மூலச் செய்தியில் உள்ள கூற்று அல்லது வினவல்களுக்கு அருகிலேயே உங்கள் கருத்துக்களை அளிப்பது எளிமையானது என்று நம்மில் பலர் எண்ணுவதுண்டு. மூலச் செய்தியில் உள்வரிக் கருத்துரைகளைப் பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களைச் சேர்க்கலாம். மூலச் செய்தியின் அங்கத்தில் இடங்காட்டியை வைத்து தட்டச்சு செய்யும் இடத்தில் உங்கள் கருத்துக்கள், உங்கள் பெயருடன் தோன்றும். நீங்கள் விரும்பினால், மூலச் செய்தியில் உங்கள் கருத்துரைகளை அடையாளம் காட்டும் உரையை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றலாம்.உள்வரிக் கருத்துரைகளை இயக்கி, அடையாள உரையை உருவாக்குதல்

  • Tools மெனுவில், Options என்பதைக் கிளிக் செய்யவும்.
  • Preferences தாவலில், E-mail Options என்பதைக் கிளிக் செய்யவும்.
  • Mark my comments with என்ற தேர்வுப் பெட்டியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கருத்துரைகளை அடையாளம் காட்ட விரும்பும் உரையைத் தட்டச்சு செய்யவும். உள்வரிக் கருத்துரைகளைப் பயன்படுத்தி ஒரு செய்திக்குப் பதிலளிக்கும்போது, அடைப்புக்குறிகளுக்குள் இந்த உரை தோன்றும்.

செய்தியில் உள்வரிக் கருத்துரைகளைச் சேர்த்தல்

  • உங்களுக்கு வந்த ஒரு செய்தியைத் திறந்து, Reply என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அசல் செய்தியின் அங்கத்தில் கிளிக் செய்து, உங்கள் கருத்துரைகளைத் தட்டச்சிடத் துவங்கவும்.

மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ஆன்லைன் தளத்தில் இருந்து மொழிபெயர்த்தது.

Word 2007 -இல் எனது மெனுக்கள் எங்கே?

சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் 2007 தொகுப்பில் உள்ள பயன்பாடுகள் அனைத்தும் புதுப்பொலிவுடன் புதிய தோற்றத்தில், பல சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.

உதாரணத்திற்கு, Word 2003 -இல் மெனுக்களை நாம் அணுகிப் பயன்படுத்திய முறையும், Word 2007 -இல் அவற்றைப் பயன்படுத்தும் முறையும், புதிய தோற்றத்தின் காரணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தனது வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில், Word 2003 -இல் உள்ள ஒவ்வொரு மெனுவும் அவற்றின் துணை மெனுக்களும், Word 2007 -இல் எங்கு உள்ளன என்று பட்டியலிட்டு ஒரு எக்சல் கோப்பாக வெளியிட்டுள்ளது.

இதோ, பன்வரும் இணைப்பைக் கிளிக் செய்து அந்த பட்டியலைப் பெற்று பயனடையலாம்:

Word Ribbon mapping workbook

ஆஃபீஸ் எக்சல் 2007 – புதிய அம்சங்கள்

  1. புதிய கோப்பு வடிவமைப்புகள்
    XML-சார்ந்த கோப்பு வடிவமைப்பு – ஆஃபீஸ் ஒபன் XML வடிவமைப்பு என்றழைக்கப்படும் இந்தப் புதிய வடிவமைப்புகளின் மூலம், புறத் தரவு மூலங்களை ஒருங்கிணைக்கும் வசதியையும், சிறிய கோப்பு அளவுகள் மற்றும் மேம்பட்ட தரவு மீட்பு வசதியையும் பெறலாம்.
    எக்சல் பணிப்புத்தகத்தின் இயல்நிலை வடிவமைப்பு:
    ஆஃபீஸ் எக்சல் 2007 XML-சார்ந்த கோப்பு வடிவமைப்பு (.xlsx)

    பிற XML-சார்ந்த வடிவமைப்புகள்:
    ஆஃபீஸ் எக்சல் 2007 XML-சார்ந்த, மேக்ரோ-செயல்படும் கோப்பு வடிவமைப்பு (.xlsm),
    எக்சல் வார்ப்புருவுக்கான ஆஃபீஸ் எக்சல் 2007 கோப்பு வடிவமைப்பு (.xltx),
    எக்சல் வார்ப்புருவுக்கான ஆஃபீஸ் எக்சல் 2007 மேக்ரோ-செயல்படும் கோப்பு வடிவமைப்பு (.xltm)
    ஆஃபீஸ் எக்சல் 2007 பைனரி (அல்லது BIFF12) கோப்பு வடிவமைப்பு (.xls) – சிறந்த செயல்பாடு மற்றும் முந்தைய பதிப்பு இணக்கத்திற்காக இந்த கோப்பு வடிவமைப்பைப் பயன்படுத்தலாம்.
  2. எக்சலின் முந்தைய பதிப்புகளுடன் இணக்கம்:
    உங்கள் எக்சல் 2007 பணிப்புத்தகத்தில், முந்தைய எக்சல் பதிப்புகளில் பயன்படுத்த முடியாத அம்சங்கள் அல்லது வடிவமைப்புகள் உள்ளனவா எனச் சரிபார்த்து, தேவையான மாற்றங்களைச் செய்யலாம். அதுமட்டுமின்றி, ஆஃபீஸ் எக்சல் 2007 பணிப்புத்தகத்தை, எக்சலின் முந்தைய பதிப்புகளில் திறக்கவும், அதில் அதைத் திருத்தி சேமித்து, ஆஃபீஸ் எக்சல் 2007 தொடர்பான செயல்பாடு அல்லது அம்சங்கள் எதையும் இழக்காமல், மீண்டும் அதை ஆஃபீஸ் எக்சல் 2007 -இல் திறப்பதற்கு ஏதுவாக, எக்சலின் முந்தைய பதிப்புகளில் மாற்றிகள் மற்றும் புதுப்பித்தல்களை நிறுவலாம்.
  3. எண்ணற்ற வரிசைகள், நெடுவரிசைகள் மற்றும் பிற புதிய வரம்புகள்:
    மிக அதிக எண்ணிக்கையிலான தரவை பணித்தாள்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, ஒவ்வொரு பணித்தாளிலும் 1 மில்லியன் வரிசைகள் மற்றும் 16 ஆயிரம் நெடுவரிசைகள் வரை ஆஃபீஸ் எக்சல் 2007 -இல் பயன்படுத்தலாம். அதாவது, மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் எக்சல் 2003 உடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 1,048,576 வரிசைகள் (1,500% விழுக்காடு அதிகம்) மற்றும் 16,384 நெடுவரிசைகள் (6,300% விழுக்காடு அதிகம்). நெடுவரிசைகள் எதில் முடிவடைகிறது என்று அறிய ஆவலாக உள்ளதா? IV -க்குப் பதிலாக XFD -இல் முடிகிறது.
    அதுமட்டுமின்றி,
    வடிவமைப்பு எண்ணிக்கையின் கணக்கும் 4,000 -இல் இருந்து எல்லையற்றதாக மாற்றப்பட்டுள்ளது.
    ஒவ்வொரு கலத்தையும் குறிக்கும் கலக் குறிப்புகளின் எண்ணிக்கை 8,000 -இல் இருந்து கிடைக்கும் நினைவக வரம்பிற்கேற்ப பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
    நினைவக நிர்வாகம் 1 ஜி.பி.யில் இருந்து 2 ஜி.பி.யாக உயர்த்தப்பட்டுள்ளது.
    ஆஃபீஸ் எக்சல் 2007 -இல் 16 மில்லியன் வண்ணங்கள் வரை பயன்படுத்தலாம்.
  4. மேம்பட்ட வரிசைமுறை, வடிகட்டி
    உங்களுக்குத் தேவையான முடிவுகளை மட்டும் நீங்கள் பார்க்கும் வகையில், உங்கள் ஆஃபீஸ் எக்சல் 2007 பணித்தாள் தரவை வடிகட்டி வரிசைப்படுத்தலாம்.
    உதாரணத்திற்கு,
    ஆஃபீஸ் எக்சல் 2007 -இல் வண்ணத்தைப் பயன்படுத்தி வரிசைப்படுத்தலாம்.
    மூன்று நிலைகளுக்கு மேல் (64 அடுக்குகள் வரை) வரிசைப்படுத்தலாம்.
    வண்ணம் அல்லது தேதியைப் பயன்படுத்தி வடிகட்டலாம்.
    தானியங்குவடிகட்டி பட்டியலில் 1000 உருப்படிகளுக்கு மேல் தோன்றச் செய்யலாம்.

மூலம்: What’s new in Microsoft Office Excel 2007

நோட்பேடில் யூனிகோட் எழுத்துருக்களைச் சேமித்தல்

நோட்பேடில் சேமித்த வைத்த கோப்பில் உள்ள யூனிகோட் எழுத்துருக்கள் அனைத்தும் உருக்குலைந்து போய், தட்டச்சு செய்த அனைத்தையும் மீண்டும் தட்டச்சிட்ட அனுபவம் உள்ளவரா நீங்கள்?

இனி அந்தக் கவலை வேண்டாம். இதோ உங்களுக்காக ஒரு எளிய குறிப்பு-

யூனிகோட் எழுத்துருக்கள் உள்ள ஒரு கோப்பை நோட்பேடில் சேமிக்கும்போது, “Save As” உரையாடல் பெட்டியில்,

1. “File name” உரைப் பெட்டியில் நீங்கள் சேமிக்க விரும்பும் கோப்பு பெயரை உள்ளிடவும்.
2. “Save as type” தேர்வுப் பெட்டியில், “Text Document (*.txt)” என்பதைத் தேர்வு செய்யவும்.
3. “Encoding” தேர்வுப் பெட்டியில், “Unicode” என்பதைத் தேர்வு செய்யவும்.

இவ்வாறு சேமித்தால் மட்டுமே உங்கள் கோப்பில் உள்ள யூனிகோட் எழுத்துருக்கள் (Fonts) உருக்குலையாமல் இருக்கும். “Encoding” தேர்வுப் பெட்டியில், “ANSI” என்பதைத் தேர்வு செய்தால், உங்கள் கோப்பில் உள்ள யூனிகோட் எழுத்துருக்கள், அனைத்தும் “??????” என்றே காட்சியளிக்கும்.

தொடர்ந்து படிக்க….