நோட்பேடில் யூனிகோட் எழுத்துருக்களைச் சேமித்தல்
நோட்பேடில் சேமித்த வைத்த கோப்பில் உள்ள யூனிகோட் எழுத்துருக்கள் அனைத்தும் உருக்குலைந்து போய், தட்டச்சு செய்த அனைத்தையும் மீண்டும் தட்டச்சிட்ட அனுபவம் உள்ளவரா நீங்கள்?
இனி அந்தக் கவலை வேண்டாம். இதோ உங்களுக்காக ஒரு எளிய குறிப்பு-
யூனிகோட் எழுத்துருக்கள் உள்ள ஒரு கோப்பை நோட்பேடில் சேமிக்கும்போது, “Save As” உரையாடல் பெட்டியில்,
1. “File name” உரைப் பெட்டியில் நீங்கள் சேமிக்க விரும்பும் கோப்பு பெயரை உள்ளிடவும்.
2. “Save as type” தேர்வுப் பெட்டியில், “Text Document (*.txt)” என்பதைத் தேர்வு செய்யவும்.
3. “Encoding” தேர்வுப் பெட்டியில், “Unicode” என்பதைத் தேர்வு செய்யவும்.
இவ்வாறு சேமித்தால் மட்டுமே உங்கள் கோப்பில் உள்ள யூனிகோட் எழுத்துருக்கள் (Fonts) உருக்குலையாமல் இருக்கும். “Encoding” தேர்வுப் பெட்டியில், “ANSI” என்பதைத் தேர்வு செய்தால், உங்கள் கோப்பில் உள்ள யூனிகோட் எழுத்துருக்கள், அனைத்தும் “??????” என்றே காட்சியளிக்கும்.
சரிதான். Unicode என்றில்லாமல் UTF-8 என்று இருக்கும் (என்னுடைய Windows XP ல் அட்லீஸ்ட்). இதையும் சொல்லவும்.
வோர்டில் டைப் பண்ணி பின்னால் கட்-பேஸ்ட் பண்ணும்போது பல குழப்படிகள் வருகின்றன. பாரா மார்க்ஸ் எல்லாம் உருமாறிப்போகின்றன.
அதற்கு இந்த வோர்ட்பேட் எவ்வளவோ தேவலை? இதோபோல, சிறந்த இலவச மென்பொருள்களும் வோர்ட்பேட்டை விட கொஞ்சம் சிறப்பாக கிடைக்கின்றன. அதையும் பயன்படுத்தலாம்.
உபயோகமான குறிப்புக்கு நன்றி